அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சி: 2 இந்தியர்கள் கைது


அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சி: 2 இந்தியர்கள் கைது
x
தினத்தந்தி 20 April 2019 10:00 PM GMT (Updated: 20 April 2019 8:13 PM GMT)

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சி செய்த 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நியூயார்க்,

மெக்சிகோ எல்லை வழியாக தங்கள் நாட்டுக்குள் யாரும் சட்ட விரோதமாக நுழைந்து விடாதபடிக்கு அமெரிக்கா தீவிர கண்காணிப்பு பணிக்கு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் 24 மணி நேரமும் ரோந்து பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் அரிசோனா மாநிலத்தில் உள்ள அமெரிக்கா-மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைய முயற்சித்த 2 இந்தியர்கள் கடந்த புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். நேற்றுதான் இது குறித்த தகவல்கள் வெளியே கசிந்தன.

அவர்கள் இருவரும் ஆஜோ எல்லை ரோந்து போலீசார்வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவர் சீக்கியர் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 2 பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவர்கள் எந்த மருத்துவ உதவியும் கோரவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Next Story