தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் கூறிய இந்தியா


தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் கூறிய இந்தியா
x
தினத்தந்தி 15 May 2019 4:39 AM GMT (Updated: 15 May 2019 4:39 AM GMT)

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக, தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்தியா கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

புதுடெல்லி,

ஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருந்து வந்தது.  இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக டிரம்ப் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது முதல், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது.

 ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அளித்த சலுகைகளையும் கடந்த 1 ஆம் தேதியோடு அமெரிக்கா ரத்து செய்தது. இதனால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. 

இந்த சூழலில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஷாரீப், இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்தார்.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜை சந்தித்து ஜாவத் ஷாரீப் பேசினார். 

இந்த சந்திப்பின் போது,   ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சுஷ்மா சுவராஜ் கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

Next Story