உலக செய்திகள்

சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி + "||" + China: The building wall collapses in Shanghai, killing 10 people

சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி

சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி
சீனாவில் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஷாங்காய் ,

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.

நேற்று மாலை திடீரென்று இந்த கட்டிடத்தின் சுவர் உடைந்து கீழே விழுந்தது. இதில் கட்டிடத்தின் ஒருபகுதி தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக்  கொண்டிருந்த சுமார் 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.


தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் இன்று காலை 10 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
2. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
3. ஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா
பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.
4. சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் -சீனா
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் என சீனா கூறி உள்ளது.
5. ‘அவெஞ்சர்ஸ்’ படம் பார்த்து தேம்பி, தேம்பி அழுத இளம் பெண் - மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
சீனாவில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்து இளம் பெண் ஒருவர் தேம்பி, தேம்பி அழுத வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...