உலக செய்திகள்

சவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் : ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை + "||" + Drone strike on Saudi airport

சவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் : ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை

சவுதி விமான நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் : ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015–ம் ஆண்டில் தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் நீடித்து வருகிறது.

சனா, 

அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் களம் இறங்கி உள்ளன. இதன் காரணமாக சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். 

அவ்வப்போது சவுதி அரேபியாவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் உண்டு.

இந்த நிலையில், சவுதி அரேபியாவின் எல்லையோர நகரமான நஜ்ரன் விமான நிலையத்தில் உள்ள ஆயுதக்கிடங்கை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தினர்.

‘காசிப்–கே 2’ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அந்த ஆயுதக்கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது.

இதை அல் மசிராஹ் டி.வி. சேனல் அறிவித்தது.

இதற்கு மத்தியில் சவுதி கூட்டுப்படைகளின் செய்தி தொடர்பாளர் கர்னல் துர்கி அரர் மாலேகி, ‘‘நஜ்ரனில் உள்ள ஆயுதக்கிடங்கை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது’’ என அல் அரேபியா டி.வி. சேனலில் உறுதி செய்தார்.

மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு இணங்க, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை இருக்கும் என துர்கி அரர் மாலேகி தெரிவித்தார்.

ஆனால் ஆளில்லா விமான தாக்குதலில் உயிர்ப்பலி ஏதும் உண்டா என அவர் தெரிவிக்கவில்லை.

தங்கள் நாட்டின் ஜெட்டா மற்றும் டாயிப் நகரங்களை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் வழிமறித்து தாக்கப்பட்டன என சவுதி அரேபியா நேற்று முன்தினம் கூறிய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரடாச்சேரி அருகே இடப்பிரச்சினையில் பெண் மீது தாக்குதல் தந்தை-மகனுக்கு வலைவீச்சு
கொரடாச்சேரி அருகே இடப்பிரச்சினை காரணமாக பெண்ணை தாக்கிய தந்தை-மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. நாகர்கோவிலில் பரபரப்பு காதல் தம்பதி மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
நாகர்கோவிலில் காதல் தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.
3. வாலிபர் மீது தாக்குதல் - வேளாண்மை உதவி இயக்குனர் கைது
ஓமலூர் அருகே, வாலிபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
4. ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல்; இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை
சேலத்தில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறி அவரை கண்டித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தை நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.
5. கடனுக்கு பெட்ரோல் கொடுக்காததால் ஊழியர்கள் மீது தாக்குதல் 3 பேருக்கு வலைவீச்சு
கபிஸ்தலம் அருகே கடனுக்கு பெட்ரோல் தர மறுத்ததால் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.