நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் கடுமையான நிலநடுக்கம்


நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் கடுமையான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2019 5:04 AM GMT (Updated: 9 Jun 2019 5:04 AM GMT)

நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்தின் வடகிழக்கே 40 கி.மீ. தொலைவில் தெற்கு தீவின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் இன்று அதிகாலை 3.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.

இதனால் ஏற்பட்ட நில அதிர்வு குயின்ஸ்டவுன் மற்றும் வனாகா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் உணரப்பட்டு உள்ளது.  நிலநடுக்கம் ஆல்பைன் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

பசிபிக் தட்டு மற்றும் இந்தோ-ஆஸ்திரேலிய தட்டு பகுதிகளுக்கு இடையே எல்லையை உருவாக்கும் பகுதியாக ஆல்பைன் உள்ளது.  இது நியூசிலாந்திற்கு மிக பெரிய இயற்கை அச்சுறுத்தலில் ஒன்றாக உள்ளது.

கடந்த வருடம் பிரிட்டன் நாட்டின் டர்ஹாம் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த டாம் ராபின்சன் தலைமையிலானஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஆல்பைன் பகுதியில் ரிக்டர் அளவில் 8க்கும் அதிக அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட கூடும் என தெரிவித்து இருந்தது.

Next Story