வடகொரியா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்


வடகொரியா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
x
தினத்தந்தி 18 Jun 2019 8:07 AM GMT (Updated: 18 Jun 2019 8:07 AM GMT)

2 நாட்கள் பயணமாக வடகொரியா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங், கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசுகிறார்.

பெய்ஜிங்,

அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் போக்கை காட்ட துவங்கியிருக்கும் வடகொரியா, சீனாவுடன் எப்போதும் நல்லுறவை கடைபிடித்து வருகிறது. 

இந்த சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங், முதன் முறையாக வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 2 நாட்கள் பயணமாக வடகொரியா செல்லும் ஜி ஜின்பிங்,  அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேச உள்ளார்.  

இன்னும் சில வாரங்களில் ஜி -20  கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில்,  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை , ஜி ஜின்பிங் சந்திக்க உள்ள நிலையில், கிம் ஜாங் அன்னை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Next Story