வங்காளதேசத்தில் ரெயில் விபத்து: 5 பேர் பலி, 67 பேர் காயம்


வங்காளதேசத்தில் ரெயில் விபத்து: 5 பேர் பலி, 67 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Jun 2019 6:14 AM GMT (Updated: 24 Jun 2019 6:14 AM GMT)

வங்காளதேசத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.

டாக்கா, 

வங்காளதேசத்தின் வடகிழக்கு பிராந்திய நகரமான சில்ஹெடில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு விரைவு ரெயில் வந்து கொண்டிருந்தது.  இந்த ரெயில் பராம்சல் என்ற இடத்தில் வரும் போது, திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை ஒட்டிச்சென்ற கால்வாயில் பாய்ந்தது.  ஒரு பெட்டி தலைக்குப்புற கவிழ்ந்தது. 

இந்த விபத்தையடுத்து,  ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அலறினர். விபத்தில் 5 பயணிகள் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் 67 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story