இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 14 July 2019 9:55 AM GMT (Updated: 14 July 2019 9:55 AM GMT)

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜகார்தா, 

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி9.10மணியளவில் உணரப்பட்டுள்ளது.  

வடக்கு மலுகு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

Next Story