உலக செய்திகள்

குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி + "||" + Pakistan will grant consular access to Indian spy Jadhav: PFO

குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி

குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி
குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்

சர்வதேச கோர்ட்டு நீதிபதிகள், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து  அதிரடி தீர்ப்பு அளித்தனர். மேலும், அவர் மீதான தண்டனையை மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை சர்வதேச கோர்ட்டின் தலைமை நீதிபதி அப்துல் காவி அகமது யூசுப் வாசித்தார்.

16 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 15 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஒரு மனதாக அளித்தனர். ஒரு நீதிபதி மட்டுமே எதிரான நிலையை எடுத்துள்ளார். எனவே பெரும்பான்மை தீர்ப்பு நடைமுறைக்கு வரும்.  குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் அணுக அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், வியன்னா ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான உரிமைகள்,  குல்பூஷண் ஜாதவுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சட்டங்களின்படி, குல்பூஷண் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான நடைமுறைகளை வகுத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில், குல்பூஷண் ஜாதவை அவரது மனைவியும் தாயாரும் கடும் கட்டுப்பாடுகளுடன் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதித்தது. அதன் பிறகு குல்பூஷண் ஜாதவின் நிலை குறித்து வெளியுலகிற்கு ஏதும் தெரியாது. இந்நிலையில், இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் வீரமரணம்
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
3. பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான் பேச்சு - இந்தியா திட்டவட்டம்
பாகிஸ்தானுடன் இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை பற்றி மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா திட்டவட்டமாக கூறி உள்ளது.
4. ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து
ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளது, செல்போன் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. சம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு
சம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மீண்டும் இயக்க இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.