காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானுடனான இருதரப்பு பிரச்சினை - வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்


காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானுடனான இருதரப்பு பிரச்சினை - வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 2 Aug 2019 5:33 AM GMT (Updated: 2 Aug 2019 6:14 AM GMT)

காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானுடனான இருதரப்பு பிரச்சினை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவிடம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

பாங்காக்,

9 வது கிழக்கு ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாடு இன்று  வெள்ளிக்கிழமை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவை சந்தித்தார். இருவரது சந்திப்பிற்கு பிறகு எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இந்த சந்திப்புக்கு பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டு உள்ள டுவிட்டில், பிராந்திய பிரச்சினைகள் குறித்து மைக் பாம்பியோவுடன் பரந்த அளவிலான விவாதங்கள் நடைபெற்றன.

காஷ்மீர் பற்றிய எந்தவொரு விவாதமும் , எந்தவொரு உத்தரவாதமும் இருந்தால்,  அது பாகிஸ்தானுடன் மட்டுமே இருக்கும் என தெளிவான வகையில்  அமெரிக்க பிரதிநிதி  பாம்பியோவிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது என கூறி உள்ளார்.

இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துக் கொள்வது இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்தது எனவும், இரு நாடுகளும் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story