ஏலியன் போன்ற உருவ அமைப்புடன் வலையில் சிக்கிய மீன்


ஏலியன் போன்ற உருவ அமைப்புடன் வலையில் சிக்கிய மீன்
x
தினத்தந்தி 18 Sep 2019 2:55 AM GMT (Updated: 18 Sep 2019 2:55 AM GMT)

நார்வே நாட்டில் ஏலியன் போன்ற உருவ அமைப்புடன் கூடிய மீன் வலையில் சிக்கியுள்ளது.

ஆஸ்லோ,

நார்வே நாட்டில் நார்டிக் சீ ஆங்கிளிங் என்ற மீன்பிடி நிறுவனத்தில் வழிகாட்டியாக பணிபுரிந்து வருபவர் ஆஸ்கார் லுன்டால் (வயது 19).  அந்நாட்டின் கடலோர பகுதியில் அந்தோயா தீவு அருகே புளூ ஹேலிபட் என்ற அரிய வகை உயிரினத்தினை தேடி கடலுக்குள் சென்றுள்ளார்.

அவரது வலையில் ஏதோ ஒரு பெரிய மீன் சிக்கியுள்ளது என உணர்ந்துள்ளார்.  தொடர்ந்து அதனை கடல்நீரில் இருந்து வெளியே எடுப்பதற்கு அவருக்கு அரை மணிநேரம் ஆகியுள்ளது.  வலையை வெளியே எடுத்து அதில் சிக்கிய மீனை காண சென்றவர் அதிர்ச்சியில் துள்ளி குதித்து விட்டார்.

அவரிடம் சிக்கிய மீன் மிக பெரிய கண்களுடன் காண்பதற்கு ஏலியன் போன்ற உருவத்துடன் அச்சுறுத்தும் வகையில் இருந்துள்ளது.  அதன் கண்கள் பெரிய அளவில் இருந்தன.  வாய் அமைப்பும் வேறுபட்டு இருந்தது.  இருளிலும் காண்பதற்கு வசதியாக இவ்வளவு பெரிய கண் அவற்றுக்கு உள்ளது என நம்பப்படுகிறது.  சுறா வகையுடன் சேர்ந்த இந்த மீன் ரேட்பிஷ் மீன் ஆகும்.  கடலின் ஆழத்தில் வசிக்க கூடிய இவ்வகை மீன்கள் வலையில் அதிகம் சிக்குவதில்லை.

Next Story