இத்தாலியில் மோட்டார் படகு கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு


இத்தாலியில் மோட்டார் படகு கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 Sep 2019 10:45 PM GMT (Updated: 18 Sep 2019 7:21 PM GMT)

இத்தாலியில் நடந்த படகு போட்டியில், மோட்டார் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 3 பேர் உயிரிழந்தனர்.


* அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவை சேதப்படுத்திய வழக்கில் வாலிபர் ஒருவருக்கு உள்ளூர் கோர்ட்டு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

* வளைகுடா பகுதியில் நாங்கள் மோதலை விரும்பவில்லை என்றும், அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் தான் வளைகுடா பகுதியில் மோதல் ஏற்பட காரணம் என்றும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கூறினார்.

* இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த படகு போட்டியின்போது, மோட்டார் படகு ஒன்று, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அரசு முறை பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். வளைகுடா பகுதியில் மோதல் வலுத்துவரும் நிலையில் அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.

* இங்கிலாந்து நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கி வைத்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீது அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரணையை தொடங்கியது. 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 3 நாட்கள் இந்த வழக்கை விசாரிக்கும் என தெரிகிறது.

Next Story