மன்மோகன், ரகுராம் ராஜன் பதவி காலத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிலை மோசமாக இருந்தது -நிர்மலா சீதாராமன்


மன்மோகன், ரகுராம் ராஜன் பதவி காலத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிலை மோசமாக இருந்தது -நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 16 Oct 2019 9:58 AM GMT (Updated: 16 Oct 2019 9:58 AM GMT)

மன்மோகன்சிங், ரகுராம் ராஜன் பதவி காலத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

நியூயார்க்,

நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழக சர்வதேச மற்றும் பொதுவிவகார பள்ளியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றும் போது கூறியதாவது:-

அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் “உயிர்நாடி” கொடுப்பது தனது முதல் கடமையாகும்.

இந்திய பொருளாதாரம் மந்தமாக இருந்த நேரத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக தேர்ந்தெடுத்த சிறந்த அறிஞராக ரகுராம் ராஜனை நான் மதிக்கிறேன்.

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த காலத்தில்தான் வெறும் எடுபிடி  தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டன.

நான் யாரையும் கேலி செய்யவில்லை, ஆனால் பிரதமராக மன்மோகன் சிங்கும், ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனும் இணைந்திருந்த போது இருந்ததை  விட இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கு மோசமான கட்டம் வேறு எதுவும் இல்லை என்ற உண்மையை அவருக்கு முன் வைக்கிறேன். அந்த நேரத்தில், எங்கள் யாருக்கும் இது பற்றி தெரியாது என கூறினார்.

Next Story