உக்ரைன் நாட்டின் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 2 பேர் பலி


உக்ரைன் நாட்டின் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 Oct 2019 9:45 PM GMT (Updated: 23 Oct 2019 9:34 PM GMT)

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 2 பேர் பலியாயினர்.


* உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் உள்ள புஷ்கின்ஷ்கா என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு குண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

* அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து தன்னை நீக்கக்கோரி ஜனநாயக கட்சியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மனம், ஒரு கும்பல் தாக்குதலை போன்றது என, டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

* ஸ்பெயின் நாட்டில் தன்னாட்சி பெற்ற மாகாணமான கேட்டலோனியாவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்தோடுகிறது. வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன மேலும் 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

* இந்தோனேசியாவில் அதிபர் ஜோகோ விடோடோ தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றுக்கொண்டது. இந்த பதவி ஏற்பு விழாவுக்கு மந்திரிகள் அனைவரும் தங்களின் மனைவிகளோடு நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.


Next Story