உலக செய்திகள்

ரஷியாவில் மினி பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி: 9 பேர் பலத்த காயம் + "||" + Mini bus and lorry collide in Russia - 2 killed, 9 injured

ரஷியாவில் மினி பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி: 9 பேர் பலத்த காயம்

ரஷியாவில் மினி பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி: 9 பேர் பலத்த காயம்
ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் கிராய் நகரில் மினி பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* ஈரானின் தென்மேற்கு பகுதியில் குஸ்எஸ்தான் மாகாணத்தில் 2,400 சதுரகிலோ மீட்டர் அளவு கொண்ட புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். அந்த எண்ணெய் வயலில் 5,300 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.


* ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீக்கு மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

* பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கிராஸ்னோயார்ஸ்க் கிராய் நகரில் மினி பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* பொலிவியாவில் அதிபருக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று போராட்டக்காரர்கள் தலைநகர் லா பாசில் இருக்கும் அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையத்தை சூறையாடினர்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் ஆர்வம்
ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக காத்திருக்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
2. ரஷியாவில் நதியில் குளித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேர் பலி
மருத்துவ படிப்புக்காக ரஷியா சென்ற சென்னை உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள நதியில் மூழ்கி பலியானார்கள்.
3. போதையில் கொடுமை: கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி
போதையில் கொடுமை செய்ததால் கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார் மனைவி
4. கார் மரத்தில் மோதல்; இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது
கர்நாடகாவில் கார் மரத்தில் மோதியதில் இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது.
5. சீனா-ரஷியா உறவுகளில் விரிசல்; சீனா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு
சீனா-ரஷியா உறவுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது சீனா உளவு பார்த்ததாக ரஷியாகுற்றம் சாட்டியது, எஸ் -400 ஏவுகணை வழங்குவதை ஒத்திவைக்கிறது.