உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்: துப்பாக்கி சண்டையில் 14 பேர் சாவு + "||" + Terror in Mexico: 14 killed in gunfire

மெக்சிகோவில் பயங்கரம்: துப்பாக்கி சண்டையில் 14 பேர் சாவு

மெக்சிகோவில் பயங்கரம்: துப்பாக்கி சண்டையில் 14 பேர் சாவு
மெக்சிகோவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 14 பேர் பலியாகினர்.
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவின் கோகுய்லா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆயுதம் ஏந்தி செயல்பட்டு வரும் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.


இந்த நிலையில் கோகுய்லா மாகாணத்தின் வில்லா யூனியன் நகரில் அரசு ஊழியர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இது பற்றி தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை சுற்றிவளைத்து தாக்கினர்.

இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் பாதுகாப்பு படையினர் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வெனிசூலாவில் பயங்கரம்: கரும்பு தோட்டத்தில் தீ விபத்து; 12 பேர் உடல் கருகி சாவு
வெனிசூலாவில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
2. நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 14 பேர் சாவு
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி 14 பேர் பலியாயினர்.
3. மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு: 3 கி.மீ தொலைவிற்கு கரும் புகை சூழ்ந்தது
மெக்சிகோ நாட்டில் உள்ள போபோகாட்பெட் எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் உள்ள நகரங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. மெக்சிகோ நாட்டில் அதிகாலை நேரத்தில் எரிவாயு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 6 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் அதிகாலை நேரத்தில் எரிவாயு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.
5. 175 குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 34 பாதிரியார்கள்
மெக்சிகோவிலுள்ள சர்ச் ஒன்றில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியார்கள் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.