உலக செய்திகள்

தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு + "||" + Peace talks with Taliban suspended - US announces

தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு

தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு
தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலீபான் தரப்பு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியாகினர்.


இதனால் கோபம் அடைந்த டிரம்ப், தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார். இதனால் அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே மீண்டும் மோதல் வலுத்தது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணமாக சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி இருப்பதாக அறிவித்தார்.

அதன்படி கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும், தலீபான் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானில் 2 நாள் சண்டை நிறுத்தத்தை கொண்டுவர இருதரப்புக்கும் இடையே ஒரு வாரத்துக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பாக்ராம் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்ற பின்னர் அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது.

இது குறித்து தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி சலாமி கலீல்ஜாத் கூறுகையில், “நான் தலீபான்களை சந்தித்தபோது, பாக்ராம் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து சீற்றத்தை வெளிப்படுத்தினேன். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த தலீபான்கள் உண்மையிலேயே விரும்புகிறார்களா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் அரசுடனான அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகல் - தலீபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் அரசுடன் இன்று நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக தலீபான் பயங்கரவாதிகள் அறிவித்தனர்.