உலக செய்திகள்

நியுசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு + "||" + 5.9 magnitude earthquake hits New Zealand

நியுசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

நியுசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
நியுசிலாந்து ரவுல் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெல்லிங்டன்,

நியுசிலாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரவுல் தீவில் இரவு 1.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்த தீவின் தென் மேற்கு திசையில் சுமார் 80 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
2. ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்
ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
லடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.
4. உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
உத்தரகாண்டில் சமோலி பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. அலாஸ்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.