மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு: 3 கி.மீ தொலைவிற்கு கரும் புகை சூழ்ந்தது


மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு: 3 கி.மீ தொலைவிற்கு கரும் புகை சூழ்ந்தது
x
தினத்தந்தி 10 Jan 2020 5:13 PM GMT (Updated: 10 Jan 2020 5:13 PM GMT)

மெக்சிகோ நாட்டில் உள்ள போபோகாட்பெட் எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் உள்ள நகரங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ,

மெக்சிகோ நாட்டில் உள்ள போபோகாட்பெட் எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ளது அமெகெமீகா மற்றும் சான் பெட்ரா  நக்சபா நகரங்கள்.

இந்நகரங்களில் இருந்து சற்று தொலைவில் உள்ளது போபோகாட்பெட் எரிமலை. இந்த எரிமலை நேற்று பயங்கர  சத்தத்துடன் வெடித்து எரிமலை குழம்பை கக்கியது.  

எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட கரும் புகை சுமார் 3 கி.மீ தொலைவிற்கு சூழ்ந்தது. இதையடுத்து அந்நகரங்களில் உள்ள மக்களுக்கு  இரண்டாம் கட்ட எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story