உலக செய்திகள்

பாகிஸ்தானில் புதிய நெருக்கடி: கோதுமை மாவு பற்றாக்குறையால் சப்பாத்திக்கு ஏங்கும் மக்கள் + "||" + New crisis in Pakistan: People long for chapattis, naan as wheat flour vanishes from market

பாகிஸ்தானில் புதிய நெருக்கடி: கோதுமை மாவு பற்றாக்குறையால் சப்பாத்திக்கு ஏங்கும் மக்கள்

பாகிஸ்தானில் புதிய நெருக்கடி: கோதுமை மாவு  பற்றாக்குறையால் சப்பாத்திக்கு ஏங்கும் மக்கள்
பாகிஸ்தானில் புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கோதுமை மாவு பற்றாக்குறையால் மக்கள் சப்பாத்திகளுக்கு ஏங்கி வருகிறார்கள்.
இஸ்லாமபாத்

பாகிஸ்தான் தற்போது புதிய  நெருக்கடி ஒன்றை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானில் கோதுமை  மிகவும் அவசியமான  உணவுப்பொருள் ஆகும்.  பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களான பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகியவற்றில் உள்ள நகரங்கள் கோதுமை மாவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.  

இந்த மாகாணங்களில் மக்கள் சப்பாத்திகள் மற்றும் நாண்களுக்காக ஏங்குகிறார்கள் என்று பாகிஸ்தானின் செய்திகள் தெரிவிக்கின்றன.

கோதுமை மாவு நெருக்கடிக்கு அரசாங்கங்கள் ஒருவருக்கொருவரை குற்றம்சாட்டி வருகின்றன. மாவு நெருக்கடிக்கு பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசாங்கங்களை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் இந்த பிராந்திய அரசுகள்  மத்திய அரசாங்கமான  இம்ரான் கான் அரசாங்கம் இந்த பிரச்சினையில் சரியான நேரத்தில் தலையிடவில்லை என்று குற்றம் சாட்டுகின்றன

தற்போது இந்த மாகாண மக்கள் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முக்கியமாக அரிசியைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கடந்த பல மாதங்களாக கோதுமை மாவு நெருக்கடி நிலவுவதாக பாகிஸ்தானின் செய்தி நிறுவனமான டான் செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் பிரதமர் இம்ரான் கான் மாகாண அரசாங்கங்களுக்கு விலைவாசி உயர்வு மற்றும் இலாபதாரர்களின் பதுக்கலுக்கு எதிராக செயல்பட உத்தரவு பிறப்பித்த பின்னர் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. 

கோதுமை மாவு பற்றாக்குறையால் பல நாண் விற்பனை செய்யும் பிரபல கடைகள் மூடப்பட்டு உள்ளன என்று பிபிசி தெரிவித்துள்ளது.

இதில் கைபர் பக்துன்க்வா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  அதன் தலைநகரில் 2,500 க்கும் மேற்பட்ட நாண் விற்பனை கடைகள்  உள்ளன, ஏனெனில் இங்கு வசிப்பவர்கள் இந்த கடைகளிலிருந்து நாண்கள் வாங்க விரும்புகிறார்கள். இந்த கடைகளில் பல இப்போது மூடப்பட்டுள்ளன.

சிந்த் மாகாணத்தில் கோதுமை மாவுக்கான விகிதத்தை மாகாண அரசு ஒரு கிலோவுக்கு ரூ. 43 ஆக நிர்ணயித்துள்ளது. ஆனால் அரசாங்கம் உத்தரவை அமல்படுத்தத் தவறியதால் அரசாங்கத்தின் விலை ஒழுங்குமுறை உத்தரவு தோல்வியடைந்தது என்று ஆரி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 20 ஆம் தேதிக்குள் சிந்திலும், ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் பஞ்சாபிலும்  கோதுமை மாவு நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது என்று தேசிய உணவு பாதுகாப்பு (என்எஃப்எஸ்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான்  மக்கள் கட்சி  தலைவர் பிலாவால் பூட்டோ-சர்தாரியும் இம்ரான் கான் அரசை குற்றம்சாட்டி உள்ளார்.  

கோதுமை ஏற்றுமதியாளராக இருந்த   பாகிஸ்தானை  இறக்குமதியாளராக மாற்றியுள்ளது. பாகிஸ்தான் கோதுமை மாவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இம்ரான் கான் அரசாங்கம் 40,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியதால் பாகிஸ்தான் கோதுமை மாவு  நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் பரபரப்பு: 3-வது திருமணம் செய்ய இருந்த கணவரை அடித்து, உதைத்த முதல் மனைவி
பாகிஸ்தானில் 3-வது திருமணம் செய்ய இருந்த கணவரை முதல் மனைவி அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணி பலப்பரிட்சை நடத்துகின்றன.
3. கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல்
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல் நடத்தி உள்ளது.
4. ஓவைசி போன்றவர்களுக்காகத்தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது ; மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
ஓவைசி போன்றவர்களுக்காகத்தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் விடுதலை
பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.