உலக செய்திகள்

தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி + "||" + Six Killed after Gunman Opens Fire in Southern German Town

தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி
தெற்கு ஜெர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பெர்லின், 

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் உள்ளது ரோட் ஆம் சீ நகரம். இந்த நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகின்றது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உகாண்டா நாட்டில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலி
உகாண்டா நாட்டில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
2. ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. அமெரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.