ஆஸ்திரேலியாவில் பரிதாபம்: கேக் சாப்பிடும் போட்டியில் மூச்சு திணறி பெண் சாவு


ஆஸ்திரேலியாவில் பரிதாபம்: கேக் சாப்பிடும் போட்டியில் மூச்சு திணறி பெண் சாவு
x
தினத்தந்தி 27 Jan 2020 11:12 PM GMT (Updated: 27 Jan 2020 11:12 PM GMT)

ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போட்டியில் மூச்சு திணறி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குயின்லாந்து மாகாணத்தின் ஹெர்பிபே நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய உணவுப்பொருளான லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.

இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கேக்குகளை சாப்பிட்டனர். அப்போது போட்டியில் கலந்து கொண்ட 60 வயது பெண் ஒருவருக்கு திடீரென தொண்டையில் கேக் சிக்கியது.

அதனை தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Next Story