கொரோனா வைரஸ் திபெத் மாகாணத்திலும் பரவியது


கொரோனா வைரஸ் திபெத் மாகாணத்திலும் பரவியது
x
தினத்தந்தி 30 Jan 2020 5:36 AM GMT (Updated: 30 Jan 2020 5:36 AM GMT)

கொரோனா வைரஸ் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மாகாணத்திலும் பரவியது.

பெய்ஜிங்

சீனாவின் ஹுபே மாகாணம் யுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திபெத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பரவி  இருந்தது.  தற்போது திபெத் மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று  கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் இப்போது சீனாவின் அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்த உள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7800  ஆக உயர்ந்துள்ளது. 

தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் குறைந்தது 47 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியே எந்த இறப்பும்  இதுவரை பதிவாகவில்லை.

இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த வைரஸ்தொற்று உச்சத்தை தொட இன்னும் 10 நாட்கள் ஆகும் என்கிறது சீன சுகாதாரத் துறை.

நேற்று யுகானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜப்பானியர்களில் குறைந்தது மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக  கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 400 ஜப்பானியர்கள் வுகானில் இருந்து விமானத்தில் நாடு திரும்பி உள்ளனர்.

Next Story