ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்


ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்
x
தினத்தந்தி 1 Feb 2020 10:54 PM GMT (Updated: 1 Feb 2020 10:54 PM GMT)

ஜப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தால், மக்கள் பதற்றத்தில் தவித்தனர்.

மாஸ்கோ,

ஜப்பானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 5.2 புள்ளிகளாகவும், 5.3 புள்ளிகளாகவும் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

முதல் நிலநடுக்கம், அகாஹி நகருக்கு 9 கி.மீ. தென் கிழக்கே 39.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

அடுத்த நிலநடுக்கம் உஷிகு நகருக்கு 2 கி.மீ. வடமேற்கில், 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் அங்கு கட்டிடங்கள் அதிர்ந்தன. மக்கள் பதற்றத்துடன் வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

இருப்பினும் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

Next Story