சீனாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவு


சீனாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 22 Feb 2020 10:12 PM GMT (Updated: 22 Feb 2020 10:12 PM GMT)

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சின்ஜியாங்கில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது.


* சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சின்ஜியாங்கில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால் அங்கு உடனடியாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

* மெக்சிகோவில் டுராங்கோ மாகாணத்தில் ஒரு வேனும், டிராக்டர் டிரைலரும் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியாகினர்.

* மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவில் அதிபர் தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. தற்போதைய அதிபர் பாவ்ரே ஞாசிங்பே 4-ம் முறை அதிபர் பதவியில் அமர தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

* இந்தியாவுடன் வெற்றிகரமான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றால் பாகிஸ்தான் தனது நாட்டில் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

* சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் ராட்சத குழிக்குள் சிக்கி உள்ளனர். அங்கு மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Next Story