கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி


கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி
x
தினத்தந்தி 23 Feb 2020 10:15 PM GMT (Updated: 23 Feb 2020 10:15 PM GMT)

கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்க காடுகளில் வாழும் மான்கள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவதற்கு, அந்நாட்டு அரசு, குறிப்பிட்ட கால இடைவெளியில், அனுமதி வழங்குகிறது.

அந்த வகையில், வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் பிராந்தியத்தில், 27 இடங்களில் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகளை வேட்டையாடுவதற்கு அனுமதி கோரி, ஜனாதிபதி டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் உட்பட பலர் விண்ணப்பித்தனர்.

இதில் குலுக்கல் முறையில், 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் டொனால்டு டிரம்ப் ஜூனியரும் ஒருவர். இதற்காக, அவர், ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.71 ஆயிரம்) கட்டணம் செலுத்தியுள்ளார். டொனால்டு டிரம்ப் ஜூனியர் வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும், அந்த நாட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து, அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story