உலக செய்திகள்

சிறையில் இருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona vulnerability to Hollywood producer in jail

சிறையில் இருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு

சிறையில் இருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு
சிறையில் இருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

ஹாலிவுட் திரையுலகில் பல வெற்றிப்படங்களை தயாரித்து புகழ் பெற்றவர் ஹார்வீ வெயின்ஸ்டீன் (வயது 68). இவர் படப்பிடிப்பின்போது பல நடிகைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தன.


பிரபல நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், கெவ்னித் பேல்ட்ரோ உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நடிகைகள் ஹார்வீ மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஹார்வீ மீது பல வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அப்படி ஒரு வழக்கில் மன்ஹாட்டன் கிரிமினல் கோர்ட்டு ஹார்வீக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அண்மையில் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அவர் நியூயார்க் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு நோய் இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.