உலக செய்திகள்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது + "||" + Coronavirus live updates: Spain’s death toll surpasses China after biggest one-day jump

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஜெனீவா, 

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோன வைரஸ், உலகம் முழுவதையும் பீதிக்குள்ளாகியிருக்கிறது.  வைரசின் பிறப்பிடமான சீனாவை விட இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனா வைரஸ் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட கொரோனா வைரஸ், மீண்டும் அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 6 பேர் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனா வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் , புதிதாக 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர்.

வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,192 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் 944 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

ஸ்பெயினும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்துள்ளது. ஸ்பெயினில் புதிதாக 7,457 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ஸ்பெயினில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,647 பேர் உயிரிழந்துள்ளனர். 

 உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போது வரை  உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 468,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  114,218 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கணவருக்கு ‘93’ மனைவிக்கு ‘88’ கொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர் - குணமடைந்தது எப்படி? ருசிகர தகவல்கள்
கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
2. கொரோனா பரவுவது குறித்து முதலில் எச்சரித்த பெண் டாக்டர் மாயம்
கொரோனா வைரஸ் பரவுவதைப் பற்றி மற்ற மருத்துவர்களை முதன்முதலில் எச்சரித்த உகான் பெண் டாக்டர் பேசுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் மாயமாகி உள்ளார்.
3. 2-ஆம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது: ஐ.நா தலைவர்
2-ஆம் உலகப் போருக்கு பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐநா தலைவர் கூறினார்.
4. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் பிரணிதா
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடக்கும் ஊரடங்கால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.