உலக செய்திகள்

சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை + "||" + China reports no new coronavirus deaths for first time

சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை

சீனாவில் முதல் முறையாக  கொரோனா பாதிப்பால்  புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை
சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்,

உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) முதன் முதலாக வெளிப்பட்டது. 

அப்போது முதல் சீனாவை கொரோனா வைரஸ் உலுக்கத்தொடங்கியது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால், சீனா வைரசைக்கட்டுப்படுத்த திண்டாடியது. பின்னர் சுதாரித்த சீனா, ஹுபெய் மாகாணத்தை முடக்கியது. சீனாவின் தொடர் நடவடிக்கைகளால், தற்போது கணிசமாக கொரோனா அங்கு கட்டுக்குள் வந்துள்ளது. 

சீனாவில் புதிதாக உள்ளூரில் இருந்து கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று கடந்த சில நாட்களாகவே அந்நாடு கூறி வருகிறது. எனினும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், சீனாவில் கொரோனா உக்கிரமாக பரவத் தொடங்கி உயிரிழப்புகள் பதிவானதற்கு பிறகு, நேற்று முதல் முறையாக அங்கு கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.  ஜனவரி முதல் சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு நிகழத்தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா
சீனாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுகிறது: இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எதிர்ப்பு
ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுவதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
3. சீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா
சீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.
தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை - டொனால்டு டிரம்ப்
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.