உலக செய்திகள்

ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 7 பேர் பலி + "||" + At least 7 die in fire at Hospice in Moscow region - Emergencies Services

ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 7 பேர் பலி

ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 7 பேர் பலி
ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
கிராஸ்னோகார்ஸ்க்,

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கிராஸ்னோகார்ஸ்க் என்ற பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது.  இதில் 2வது தளத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  சம்பவத்தின்பொழுது அந்த கட்டிடத்தில் 29 பேர் இருந்துள்ளனர்.  அவர்களில் பலர் வயது முதிர்ந்த படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆவர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன், உடனடியாக 11 பேர் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.  எனினும், தீ விபத்தின்பொழுது அந்த கட்டிடத்தில் குழந்தைகள் யாரும் இல்லை.

இதனை அடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு வந்தனர்.  அவர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு 7 பேரின் உடல்களை மீட்டு உள்ளனர்.  இந்த தகவலை அந்நாட்டின் அவசரகால சேவைக்கான செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குன்றத்தூரில் மரக்கிடங்கில் தீ விபத்து
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர்கள் மலைக்கனி, சிவகுமார். இவர்களுக்கு சொந்தமான மரக்கிடங்கு மற்றும் பிளாஸ்டிக் கதவுகள் செய்யும் கடை குன்றத்தூரில் உள்ளது.
2. பெருந்துறை சிப்காட் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து
பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
3. மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் தீ விபத்து; 24 மருத்துவர்கள் மீட்பு
மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 24 மருத்துவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
4. வங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து; 5 பேர் பலி
வங்காளதேசத்தில் மருத்துவமனை ஒன்றின் கொரோனா பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
5. மத்தியபிரதேசம்: தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
மத்தியபிரதேசம் குவாலியரில் ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள் 3 பேர் காயமடைந்தனர்.