உலக செய்திகள்

மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு + "||" + The discovery of animal skeletons dating back 3,500 years to Mexico

மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோசிட்டி, 

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்த நாட்டில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானைகள் (மம்முத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “கொலம்பியாவின் மிகப்பெரிய விலங்கினங்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராட்சத யானை, காட்டெருமை, ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றின் எலும்புக்கூடுகளுடன் மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என கூறினர். பனியுக காலத்தின் விலங்குகளின் எலும்புக்கூடுகளை கண்டுபிடிப்பதில் இந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த டிசம்பரில் இதே தொல்லியல் குழுவினர் சிறு சிறு விலங்குகளின் எலும்புகளைக் கண்டெடுத்தது நினைவுகூரத்தக்கது. ஸ்பானிய காலனியாதிக்கத்துக்கு முந்தைய நாகரிகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் விமானநிலைய கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற கருத்தும் பொதுமக்களிடையே நிலவுகிறது. ஆனால் தொல்லியல் குழு இதனை மறுத்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா காலத்தில் மெக்சிகோவில் அதிகரித்துள்ள பெண்கள் கொலை
கொரோனா காலத்தில் மெக்சிகோவில் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2. மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று
மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டது.
3. தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா: 3,617 பேர் குணம்; 68 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 3,617 பேர் குணம் அடைந்தனர். 68 பேர் மரணம் அடைந்தனர்.
4. மும்பையில் 3,520 படுக்கைகளுடன் புதிதாக 5 கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரிகள்: உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார்
கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 86,509 ஆக உயர்ந்துள்ள நிலையில், மும்பையில் 3,520 படுக்கைகளுடன் புதிதாக 5 கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரிகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று திறந்து வைத்தார்.
5. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.