‘அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவது வீண்’ - ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் ஆவேசம்
அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவது வீண் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
டெக்ரான்,
ஈரான் நாட்டின் நாடாளுமன்ற புதிய சபாநாயகராக விமானப்படையின் முன்னாள் தளபதி முகமது பாகர் கலிபா கடந்த வியாழக்கிழமை தேர்வு செய்ப்பட்டார். நேற்று அவர் நாடாளுமன்றத்தில் முக்கிய உரை ஆற்றினார். அப்போது அவர் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது பயனற்றது. அது தீங்கு விளைவிக்கும் என கூறினார். கடந்த ஜனவரி மாதம் ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானியை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி கொன்றதற்கு அமெரிக்காவை வழிவாங்க அவர் சபதம் செய்தார். அப்போது அவர், “பயங்கரவாத அமெரிக்காவை எதிர்கொள்வதில் தியாகியான சுலைமானியின் ரத்தத்துக்கு பழிவாங்கி முடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்தை இப்பகுதியில் இருந்து வெளியேற்றியாக வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினார்.
Related Tags :
Next Story