அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி: டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு


அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி: டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 July 2020 5:55 AM GMT (Updated: 5 July 2020 5:55 AM GMT)

போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி நடப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 244-வது சுதந்திரனம் நேற்று கொண்டாடப்பட்டது.  சுதந்திர தின விழாவில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி நடப்பதாக கடுமையாக  குற்றம் சாட்டினார். டிரம்ப் கூறுகையில்,  சமீபகாலமாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.  இந்த போராட்டங்களில், வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.  தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டங்கள், அமெரிக்காவின் அரசியல் நடைமுறையின் அடித்தளத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இடதுசாரி கலாசார புரட்சி என்ற பெயரில், அமெரிக்காவின் கலாசாரத்தை அழிக்க முயற்சி நடக்கிறது” என்றார்.

Next Story