பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு


பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 26 July 2020 11:05 PM GMT (Updated: 26 July 2020 11:05 PM GMT)

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது


* ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் புதிய பிரதமராக முன்னாள் உள்துறை மந்திரி ஹிச்செம் மெக்கிசியை அதிபர் கைஸ் சையத் நியமித்துள்ளார். ஒரு மாதத்துக்குள் புதிய அரசை அமைக்க அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

* ரஷியாவின் எக்ஸ்பிரஸ் 80 மற்றும் எக்ஸ்பிரஸ் 103 தொலைதொடர்பு செயற்கைக்கோள்களுடன் புரோட்டான் எம் கேரியர் ராக்கெட் வருகிற 30-ந் தேதி விண்ணுக்கு புறப்படும் என்று ரஷியாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மாண்டேகா நகர சாலையில் போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* பாகிஸ்தானில் அல்கொய்தா, தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ.எல். ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களின் பெயர்கள் இன்னும் தடைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என ஐ.நா. வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story