உலக செய்திகள்

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா: கடந்த 5 நாட்களில் 400 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா + "||" + China reports 127 new coronavirus cases, highest since March 5

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா: கடந்த 5 நாட்களில் 400 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா: கடந்த 5 நாட்களில் 400 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
சீனாவில் கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெய்ஜிங்,

உலக நாடுகளை தற்போது கதி கலங்க வைத்து வரும் கொரோனா முதன் முதலில் சீனாவின் உகான் நகரில்தான் கண்டறியப்பட்டது.  கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும் உஷாரான சீனா பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

உகான் நகரம் அமைந்துள்ள ஹுபெய் நகரை முழுவதுமாக முடக்கியது. சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அந்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில், உகான் நகரில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளியும் குணம் அடைந்து விட்டதாக சீனா பெருமிதப்பட்டது.

ஆனாலும், சீனாவில் அவ்வப்போது கொரோனா தலைகாட்டி வருகிறது.  இந்த நிலையில், சீனாவின் உய்குர் இன மக்கள் அதிகம் வசிக்க்கும் பகுதியான ஜின் ஜியாங் மாகாணத்தில்,  கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கொரோனா வைரசின் 2-வது அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் ஊரடங்கு அக்.31 ஆம் தேதி வரை நீட்டிப்பு
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மராட்டியத்தில் ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா தொற்று குணமடைந்த நோயாளிகளுக்கு பல்வேறு பக்க விளைவுகள் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
3. ஜம்மு காஷ்மீரில் மேலும் 975 பேருக்கு கொரோனா
ஜம்மு காஷ்மீரில் மேலும் 975- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது
மராட்டியத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...