கமலா ஹாரிஸ் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம் -டிரம்ப் கடும் விமர்சனம்


கமலா ஹாரிஸ் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம் -டிரம்ப் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 9 Sep 2020 5:54 AM GMT (Updated: 9 Sep 2020 5:56 AM GMT)

கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவுக்கு அவமானம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவிற்கு புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் களம் இறங்கி உள்ள நிலையில், அவரை எதிர்த்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார் ஜனநாயக கட்சியின் ஜோபிடன். இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிற நாடுகளை போலவே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், எதிர்க்கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை தாக்கினார். கமலா ஹாரிசை மக்கள் விரும்பவில்லை என்றும், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வர முடியாது என்றும் கூறினார். கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானம் என்றும் டிரம்ப் கடுமையாக பேசினார்.

Next Story