கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; 36 லட்சம் பேர் பாதிப்பு


கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; 36 லட்சம் பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2020 9:33 PM GMT (Updated: 24 Oct 2020 9:33 PM GMT)

கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஜூனில் இருந்து ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 36 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

நைரோபி,

ஐ.நா.வுக்கான மனிதநேய விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் 36 லட்சம் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இந்த பகுதிகள் ஆனது மோதல், வன்முறை, பாலைவன வெட்டு கிளிகள் படையெடுப்பு மற்றும் கொரோனா வைரசின் பாதிப்புகளால் முன்பே பல்வேறு சிக்கல்களில் சிக்கி உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

தெற்கு சூடானில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வெள்ள சூழலால் 8.56 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  4 லட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.  வன்முறையால் இந்த ஆண்டு தொடக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜோங்லி என்ற நகரம் வெள்ளத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

எத்தியோப்பியாவில் 11 லட்சம் பேர் வெள்ளம் காரணம் ஆக பாதிக்கப்பட்டும், 3.13 லட்சம் பேர் இடம் பெயர்ந்தும் உள்ளனர்.

இதேபோன்று கென்யா நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பல தசாப்தங்களில் இல்லாத வகையில் பலத்த பருவமழை பொழிவால் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதேபோன்று நடப்பு 2020ம் ஆண்டில் சராசரிக்கும் கூடுதலாக மழை பொழிந்துள்ளது.  இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.  அவர்களின் வாழ்க்கை முறை, பள்ளி கூடங்கள் மற்றும் சுகாதார வசதிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

Next Story