இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் இடையூறு-ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு


representative image
x
representative image
தினத்தந்தி 28 Oct 2020 8:25 AM GMT (Updated: 28 Oct 2020 8:25 AM GMT)

இந்தியா செல்ல சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

காபூல்,

பாகிஸ்தான் உடனான ஆப்கன் ஒப்பந்தப்படி, இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களை அட்டாரி வாகா எல்லை வழியாக அனுமதித்து வருகிறது பாகி​​ஸ்தான். ஆனால், அவ்வாறு இந்தியா செல்ல சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த வகையில் 30 சதவீத வெங்காயத்தை மட்டுமே இந்தியா கொண்டு செல்ல முடிவதாகவும், 70 சதவீதம் கால தாமதத்தால் வீணாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே இருவழி வர்த்தகம் நடைபெற, தனது நிலப்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. 

இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஆப்கானிஸ்தான் கொண்டு சென்றுள்ளது.  கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அட்டாரி வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்களை கொண்டு வர பாகிஸ்தான் அனுமதித்து வருகிறது. 


Next Story