உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதார செயலாளர் ஹான்காக் + "||" + UK has vaccinated around 2 million people: Health Secretary Hancock

இங்கிலாந்தில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதார செயலாளர் ஹான்காக்

இங்கிலாந்தில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதார செயலாளர் ஹான்காக்
இங்கிலாந்தில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார செயலாளர் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
லண்டன், 

உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 9.07 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இதனிடையே இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இங்கிலாந்துக்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார செயலாளர் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்தில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தியுள்ளோம். வாரத்திற்கு 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து போடத் திட்டமிட்டுள்ளோம். கடந்த வாரத்தில், டிசம்பர் மாதத்தை விட அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம்” என்று கூறினார்.

இங்கிலாந்தில் இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிதாக 25,308 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,725 பேர் பலி
இங்கிலாந்தில் நேற்று புதிதாக 25,308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் கொரோனாவால் ஒரேநாளில் மேலும் 1,290 பேர் பலி: புதிதாக 37,892 பேருக்கு தொற்று உறுதி
இங்கிலாந்தில் புதிதாக 37,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று ஒரேநாளில் அதிகபட்ச அளவாக மேலும் 1,610 பேர் பலி
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரேநாளில் அதிகபட்ச அளவாக மேலும் 1,610 பேர் பலியாகி உள்ளனர்.
4. தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
5. இங்கிலாந்தில் புதிதாக 37,535 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 599 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,535 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.