கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்: உலக சுகாதார அமைப்பு


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்: உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 2 Feb 2021 3:32 AM GMT (Updated: 2 Feb 2021 3:32 AM GMT)

சர்வதேச அளவில் புதிய கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது, அந்நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

சர்வதேச அளவில் புதிய கொரொனா பாதிப்புகள் குறைந்து வருவது, அந்நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ்  இது தொடர்பாக கூறியதாவது:  தொடர்ந்து மூன்றாவது வாரமாக புதிய கொரோனா பாதிப்புகள் சர்வதேச அளவில் குறைவாக பதிவாகி வருகிறது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும் உலகளாவிய அளவில் பார்க்கும் போது ஊக்கபடுத்தும் வகையிலான செய்திகளை காண முடிகிறது. 

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது. உருமாறிய கொரோனா பரவினாலும் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நமக்கு கடந்த 3 வார எண்ணிக்கை பரிந்துரைக்கிறது”என்றார். அதேவேளையில், கட்டுப்பாடுகளை துரித கதியில் தளர்த்துவது கொரோனா வைரஸ் மீண்டும் முழு பலத்துடன் திரும்புவதற்கு வழிவகுத்து விடும் எனவும் எச்சரித்துள்ளார். 

Next Story