உலக செய்திகள்

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் + "||" + 4 terrorists, 2 soldiers killed in Pakistan

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் மிர் அலி நகரில் நேற்று நடந்த ராணுவத் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் உடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிர் அலி நகரில் பயங்கரவாத அமைப்பை  சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டு ராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து  அந்தப் பகுதியை சுற்றி வளைத்த ராணுவத்தினர்  தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதில் குடியிருப்பு வளாகத்திற்குள் பதுங்கி இருந்த 4  பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது ராணுவப் படையைச் சேர்ந்த 2 பேர் பலியனார்கள்.பாகிஸ்தான் இராணுவம் சமீப காலமாக வடக்கு வஜீரிஸ்தானில் தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.
2. பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
3. சேஸிங்கில் அதிக ரன்கள்; புதிய சாதனை படைத்தார் பாக்.வீரர் பகார் ஸமான் !
ரன் இலக்கை துரத்தும் போது அதிக ரன்கள் குவித்து பாகிஸ்தான் வீரர் பகார் ஸமான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
4. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
5. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லைஎன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்து உள்ளார்.