மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு: போலீஸ் அதிகாரிகளும் போராட்டம்


மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு: போலீஸ் அதிகாரிகளும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2021 12:09 AM GMT (Updated: 11 Feb 2021 12:09 AM GMT)

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

நேபிடாவ், 

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் அரசாணை திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவையும் மீறி, மியான்மரில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 

இந்த நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக போலீஸ் துறையினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  ராணுவ ஆட்சிக்கு எதிரான  சட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து சிவில் பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story