விமானம் மூலம் துபாய் திரும்புபவர்களுக்கு குடியுரிமை, வெளிநாட்டினர் விவகாரத்துறையிடம் முன் அனுமதி பெற தேவையில்லை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு


விமானம் மூலம் துபாய் திரும்புபவர்களுக்கு குடியுரிமை, வெளிநாட்டினர் விவகாரத்துறையிடம் முன் அனுமதி பெற தேவையில்லை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2021 12:18 AM GMT (Updated: 18 Feb 2021 12:18 AM GMT)

விமானம் மூலம் துபாய் திரும்புபவர்களுக்கு குடியுரிமை, வெளிநாட்டினர் விவகாரத்துறையிடம் முன் அனுமதி பெற தேவையில்லை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு.

துபாய்,

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு காரணமாக துபாய் நகருக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக துபாய் அரசின் குடியிருப்பு விசா பெற்றவர்கள் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து துபாய் நகருக்கு திரும்ப வரும் போது குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரத்துறை பொது இயக்குனகரத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த கட்டுப்பாட்டில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் துபாய் நகருக்கு வருபவர்கள் இந்த முன் அனுமதியை பெற வேண்டிய தேவையில்லை. எனினும் பயணம் செய்யும் 72 மணி நேரத்துக்குள் கொரோனா பிசிஆர் பரிசோதனை எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற விமானங்களில் துபாய் நகருக்கு வருபவர்கள் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரத்துறை பொது இயக்குனகரத்தின் முன் அனுமதியை கண்டிப்பாக பெற்று வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story