இங்கிலாந்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 9,834 பேருக்கு தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Feb 2021 5:56 PM GMT (Updated: 21 Feb 2021 5:56 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 11.18 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 24.74 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்தநிலையில், இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்புகள் பதிவாகி இருந்தன.
 
இதன்படி இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 41,15,509 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 215 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 580 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,94,218 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 15,00,711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.

டிசம்பர் 8 முதல் பிப்ரவரி 20 வரை லண்டனில் உள்ள மக்களுக்கு இதுவரை மொத்தம் 17,94,397 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 17,27,781 பேருக்கு முதல் முறையாகவும், 66,616 பேருக்கு இரண்டாவது முறையாகவும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் என்.ஹெச்.எஸ் இங்கிலாந்தின் தரவுகள் தெரிவித்துள்ளது.  

Next Story