உலக செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அடுத்த வாரம் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் உரை + "||" + Donald Trump to speak at CPAC in first public appearance after leaving White House

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அடுத்த வாரம் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் உரை

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அடுத்த வாரம் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் உரை
முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பதவி விலகியதையடுத்து, முதன்முறையாக அரசியல் நடவடிக்கை மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
புளோரிடா,  

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் 2-வது முறையாக போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி டிரம்பை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தோற்கடித்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்குப் பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் புளோரிடாவில் நடைபெறும் கன்சர்வேட்டிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மாநாட்டில் பேசுவதற்கான அழைப்பை மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் செலுத்த உள்ள ஜோ பைடன்
புதிய அதிபராக பதவியேற்க ஜோ பைடன், அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசியை செலுத்த உள்ளார்.