உலக செய்திகள்

துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கிளவுட் சீடிங் முறையும் கடைபிடிக்கப்பட்டதாக தேசிய வானிலை மையம் தகவல் + "||" + Widespread rain in various parts of the United Arab Emirates including Dubai, Sharjah and Abu Dhabi

துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கிளவுட் சீடிங் முறையும் கடைபிடிக்கப்பட்டதாக தேசிய வானிலை மையம் தகவல்

துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கிளவுட் சீடிங் முறையும் கடைபிடிக்கப்பட்டதாக தேசிய வானிலை மையம் தகவல்
துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் கிளவுட் சீடிங் முறையும் கடைபிடிக்கப்பட்டதாக அமீரக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

துபாய்,

அமீரகத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. அதன் பின்னர் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது காலநிலை மாறி அமீரகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

துபாயை பொறுத்தவரை நகரின் ஜெபல் அலி, அல் பர்சா, அபுதாபி பகுதியில் அல் சிலா, சப்கத் மத்தி, ஜெபல் தன்னா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.சார்ஜாவில் அல் தைத், ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையின் சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. வாகனத்தில் செல்பவர்கள் வேகத்தை குறைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

கிளவுட் சீடிங் முறை

கிளவுட் சீடிங் முறையின் காரணமாக இந்த மழையானது பெய்து வருகிறது. நேற்றும் இந்த கிளவுட் சீடிங் முறைப்படி விதைகள் தூவப்பட்டது. நேற்று மதியம் வரை 4 விமானங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேகங்கள் வருவதை பொறுத்து கூடுதல் விமானங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படும்.

தொடர்ந்து இந்த மழையானது அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 3 நாட்களுக்கு அதாவது, நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 25-ந்தேதி (வியாழக்கிழமை) வரையில் தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மழை காரணமாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தளவாய்புரம் பகுதியில் பலத்த மழை
தளவாய்புரம் பகுதியில் பலத்த மழை
2. விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதில் நெல் மூட்டைகளை நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3. ஊத்துக்குளியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவு
ஊத்துக்குளியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவு
4. ஈரோடு அகில்மேடு வீதியில் சாக்கடையாக ஓடிய மழை நீர்
ஈரோடு அகில்மேடு வீதியில் மழைநீர் சாக்கடையாக ஓடியது.
5. தளவாய்புரம் பகுதியில் திடீர் மழை
தளவாய்புரம் பகுதியில் திடீர் மழை