உலக செய்திகள்

சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது + "||" + In Dubai, major roads will be temporarily closed tomorrow

சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது

சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது
சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.

துபாய்,

துபாய் விளையாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாய் நகரில் யுஏஇ டூர் எனப்படும் சைக்கிள் போட்டி காரணமாக அதில் பங்கேற்றுள்ளவர்கள் முக்கிய சாலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரை கடந்து செல்வர். இதன் காரணமாக துபாய் தேரா பகுதியில் உள்ள அல் கலீஜ் சாலையின் ஒரு பகுதியானது மதியம் 12.30 மணி முதல் 12.55 மணி வரை மூடப்படும்.

பனியாஸ் சாலையின் ஒரு பகுதி மதியம் 12.50 மணி முதல் 1.15 மணி வரையிலும், துபாய்-அல் அய்ன் சாலையின் ஒரு பகுதி மதியம் 1.10 மணி முதல் 1.25 மணி வரையிலும், அல் வாசல் சாலையானது மதியம் 1.20 மணி முதல் 1.40 மணி வரையிலும் மூடப்படும்.

இதேபோல் நகரின் முக்கிய சாலைகளின் ஒரு பகுதியானது மாலை 4.30 மணி வரையிலும் சைக்கிள் போட்டி காரணமாக மூடப்பட்டிருக்கும். எனவே வாகன ஓட்டிகள் இது குறித்த தகவலை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது பயணத்தை ஏற்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் 81 வயது மூதாட்டி போட்டி
கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 81 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
2. கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு
கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு.
3. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்
டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2-வது நாளில் இந்தியா 5 பதக்கங்களை அள்ளியது.
4. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு அதிகபட்சமாக கரூரில் 90 பேர் போட்டி
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு செய்து உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் போட்டியிட 90 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
5. மனைவி தேர்தலில் போட்டி: நெல்லை கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் அதிரடி இடமாற்றம்
மனைவி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் நெல்லை மாநகர போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.