உலக செய்திகள்

அமீரகத்தில், ஒரேநாளில் கொரோனாவுக்கு 19 பேர் பலி + "||" + In the United States, 19 people were killed by corona in a single day

அமீரகத்தில், ஒரேநாளில் கொரோனாவுக்கு 19 பேர் பலி

அமீரகத்தில், ஒரேநாளில் கொரோனாவுக்கு 19 பேர் பலி
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 79 ஆயிரத்து 229 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி,

அமீரகத்தில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 79 ஆயிரத்து 229 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 814 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 19 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,164 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7 ஆயிரத்து 92 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 கோடியே 96 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 11.87 கோடியாக உயர்ந்துள்ளது.
2. வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
3. சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பலி
புன்னம்சத்திரம் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. மும்பையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; இன்று 8,217 பேருக்கு தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று ஒரே நாளில் 8,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பிடியில் இருந்து தப்ப வங்கிகளின் பணி நேரத்தை குறைக்க வேண்டும்; வங்கி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
வங்கி ஊழியர்கள் கொரோனா பிடியில் இருந்து தப்ப வங்கிகளின் பணி நேரத்தையும், பணி நாட்களையும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.