ஒரே முறை செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசிக்கு சீனா நிபந்தனைகளுடன் அனுமதி


ஒரே முறை செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசிக்கு சீனா நிபந்தனைகளுடன் அனுமதி
x
தினத்தந்தி 1 March 2021 12:58 AM GMT (Updated: 1 March 2021 12:58 AM GMT)

உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்துள்ளன.

பெய்ஜிங்,

ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசி சீனாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்சன்& ஜான்சன் தடுப்பூசிக்கு போட்டியாக சீனாவின் இந்த தடுப்பூசி பார்க்கப்படுகிறது. சீன அரசு நாளிதழில் இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: 

சீனாவின் முதல் ஏடி-5 என்கோவ் கொரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனை கடந்த ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி தொடங்கியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தடுப்பூசி செலுத்தப்பட்ட 14-வது நாளில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, சீனாவில் சைனோவாக், சைனோஃபார்ம், கேன்சைனோபா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story