அமீரகத்தில் இதுவரை 81.3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது


அமீரகத்தில் இதுவரை 81.3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 30 March 2021 5:59 PM GMT (Updated: 30 March 2021 5:59 PM GMT)

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை 81.3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியானது முடுக்கி விடப்பட்டுள்ளது. அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52 ஆயிரத்து 90 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இதுவரை இந்த தடுப்பூசியானது 81 லட்சத்து 33 ஆயிரத்து 841 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது 100-க்கு 82.24 பேர் என்ற விகிதத்தில் இருந்து வருகிறது. இந்த தடுப்பூசி போடும் பணியின் மூலம் கொரோனா தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்படும் என அமீரக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story